mAadhaar - ஐ பற்றி


mAadhaar என்பது இந்தியத் தனித்தன்மை அடையாள அதிகார அமைப்ப்பின் (UIDAI – Unique Identity Authority Of India) அதிகாரப் பூர்வ Mobile Application ஆகும்.

இந்த mAadhaar செயலி மூலம் ஆதார் எண் உடையவர்கள் தங்கள் ஆதாரில் உள்ளது போல பெயர், புகைப்படத்துடன் கூடிய முகவரி, பிறந்த தேதி, பாலினம் மற்றும் ஆதார் எண் ஆகியவற்றை தங்களது smart phone-ல் வைத்துக்கொள்ளலாம்.

mAadhaar-ன் சிறப்புகள்

  • ஆதார் எண் உடையவர்கள் தங்களது demographic தகவல்களை எளிதாக எங்கும் எப்போதும் எடுத்து செல்லலாம்.
  • இந்த செயலியில் biometric தகவல்களை Lock/Unlock செய்து கொள்ளலாம்.அதாவது கை ரேகைகள், கருவிழி ஆகியவற்றின் மூலம் ஆதார் தகவல்களை பகிர்வதை தற்காலிகமாக தடை செய்யலாம், தடை நீக்கலாம்.
  • TOTP – Time based One Time Password ஏற்படுத்திக்கொள்ளலாம். அதாவது நமது ஆதார் எண்ணைப் பயன்படுத்தும் பொது கைப்பேசி எண்ணிற்கு OTP – One Time Password அனுப்புவதற்கு பதிலாக இந்த செயலின் மூலம் OTP பெறலாம்.
  •  இந்த mAadhaar-ல் உள்ள ஆதாரை நமது அடையாள சான்றாக தற்போது பயன்படுத்தலாம். இரயில் பயணத்தின் பொழுது இதை அடையாள சான்றாக பயன்படுத்தலாம் என்று இந்திய அரசு அறிவுத்துள்ளது. 

mAadhaar பதிவிறக்கம் மற்றும் நிறுவுதல்


இந்த செயலியை Android mobile  பயன்படுத்துபவர்கள் இந்த download link for mAadhaar ஐ click செய்து பதவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பதிவிறக்கம் செய்த பிறகு அதை install செய்து கொள்ளவும்.

செயலியை திறந்தவுடன் செயலியை பயன்படுத்துவதற்கான வழிமுறைகள் இருக்கும்.

STEP 1: Create Password

          New Password எனும் இடத்தில புதிய Password கொடுக்க வேண்டும்.
          Confirm Password எனும் இடத்தில் முன்பு கொடுத்த அதே password கொடுக்க வேண்டும்.
     password-ன் விதிமுறைகள் நீங்கள் கொடுக்கும் password-ல் குறைந்தது ஓர் ஆங்கில பெரிய எழுத்து(Capital Letter), ஒரு சிறிய எழுத்து(Small Letter), ஓர் எண்(Number) மற்றும் ஒரு குறியீடு(Symbol) கண்டிப்பாக இருக்க வேண்டும் மேலும் password அனைத்தும் சேர்த்து குறைந்தது 8 எண்ணிக்கையிலும் அதிகமாக 12 வரையிலும் இருக்கலாம். எ.கா mAdhaar@123
                 
STEP 2: Terms & Conditions-ஐ டிக் செய்ய வேண்டும்
STEP 3: Confirm click செய்ய வேண்டும்
STEP 4: Create Profile
     இதில் ஆதார் எண்ணை உள்ளிட வேண்டும் அல்லது QR Code Scanning மூலம் நமது ஆதார் அட்டையில் உள்ள QR Code-ஐ scan செய்ய வேண்டும்.

STEP 4: Next கொடுக்க வேண்டும்.
STEP 5: Next கொடுத்த உடன் நீங்கள் உங்கள் ஆதாரில் பதிவு செய்த mobile எண்ணிற்கு OTP வரும் அதை நீங்கள் உள்ளீடவும்
STEP 6: Verify கொடுக்கவும்
STEP 7: நீங்கள் முதலில் கொடுத்த password-ஐ மறுபடியும் கொடுத்தால் mAadhaar முன் பக்கம் தெரியும். முன் பக்கதில் உங்களது பெயர், புகைப்படம், பிறந்த தேதி, பாலினம், ஆதார் எண், QR Code ஆகியவை காமிக்கும்.
     முன் பக்கத்தில் click செய்வதன் மூலம் பின் பக்கம் தோன்றும் அதில் முகவரி காமிக்கும்.

இந்த mAadhaar மூலம் மூன்று நபர்களின் ஆதார் விவரங்களை சேமித்து வைதுக்கொள்ளலாம் மூன்று நபரின் ஆதார் எண்ணிலும் ஒரே mobile எண் பதிவு ஆகிருந்தால்.



முக்கிய குறிப்பு : உங்களது ஆதாரில் mobile எண்ணை பதிவு செய்து இருந்தால் மட்டுமே நீங்கள் mAadhaar பயன்படுத்த முடியும்.




Comments